Search

கும்பகர்ணன் - தமிழ்பெரும்பாட்டன்

தமிழ் பெரும்பாட்டன்_கும்பகரணன் இவன் #சாப்பாட்டு_ராமன் அல்ல.... இவன் #சாதித்த_தமிழன் .

அக்கால பெயர்கள் யாவையும் அந்த வரலாற்று நாயகர்களின் பட்டப்பெயர்களே தவிர இயற்பெயர்கள் இல்லை. கும்பகரணனும் அவ்வாறே பெயர் பெற்றவர், இவரின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் முன்பு , அடையாள சின்னங்களை அல்லது குறியீடுகள் (Symbolysm ) பற்றிய சிறு புரிதல் வேண்டும்.


#குறியீடுகள்_Symbolysm *************************** ஏதேனும் ஒரு தத்துவமோ, அறிவியலையோ, வரலாற்றையோ, அமைப்பையோ, அல்லது உணர்வையோ, எளிய முறையில் மக்களிடையே கடத்த மற்றும் நினைவுபடுத்த பயன்படுத்தும் உருவக வடிவம்தான் குறியீடுகள். உதாரணமாக ஒரு நாட்டின் தேசியக்கொடியை சொல்லலாம் . ஒவ்வொரு குடிமகனும் தேசியக்கொடியை ஏற்றும் பொழுதெல்லாம் அதற்க்கு எழுந்து நின்று கொடிவணக்கம் செலுத்துவதுவதென்பது, ஏதோ பலவண்ணம் கொண்ட துணிக்கு போய் மரியாதை செலுத்துவதாக கருதாமல், அந்த கொடியின் மூலமாக அந்த நாட்டின் விடுதலைக்கு போறாடிய வீரர்களின் தியாகம், சட்டதிட்டம் , நாட்டின் இறையான்மை இவையனைத்திற்க்கும் வழங்கப்படும் மறியாதையாக கருதப்படுகிறது. ஒரு நாட்டின் குறியீடுகளில் ஒன்றாக கருதப்படும் தேசியக்கொடி, ஒவ்வொரு குடிமகனின் தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பும் கடத்தவும் காரணமாக அமைகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இதுபோல தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் , கட்சிகள், ஆன்மீக வழிபாடு இப்படி பல துறைகளிலும் இந்த குறியீடுகள் பயன்படுகின்றன. எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு குறியீடு , மருத்துவ துரை குறியீடு , மதக்குறியீடுகள் , இப்படி பலதுறைகளில் பல குறியீடுகள் கையாளப்படுவதை அடுக்கிக்கொண்டே போகலாம். அதீத தெலைதொடர்பு தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த இந்த காலத்திலேயே , ஒரு பெரிய விடயத்தை எளிதில் கையாள மிகச்சிறிய குறியீடுகள் தேவைப்படுகிறது. ஆனால் எந்தவொரு மொழியும் முழுமையான வளர்ச்சியடையாத காலத்தில் , காகிதம், கணினி, கைப்பேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட காலத்தில், மக்களுக்கு ஒரு விடையத்தை கடத்த , குறியீட்டுச் சின்னங்கள் எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.


#சிவலிங்கம்_ஏனும்_ஆதிக்குறியீடு ************************************* ஆதி மனிதன் மலைக்காடுகளில் வேட்டையாடி வாழ்ந்தான். அவன் மிருகங்கள் , இயற்கை சீற்றங்கள், நோய்கள் , போன்ற பல்வேறு இன்னல்கள் சவாலாக இருந்தது. தகுதியுள்ள உயிரினமே தப்பிப்பிழைக்கும் என்ற அறிவியல் கூற்றுக்கு இனங்க, மிருகங்களை எதிர்கொள்ள மற்றும் அழிந்துவரும் மனித இனத்தை காக்க, மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிப்பதன் மூலமாக , தங்களை பிற விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் ஏன கருதினான். அக்காலத்தில் இனச்சேர்க்கை என்பது மனிதனும் விலங்குகளைபோல அன்றாட வாழ்வில் பாலுணர்வு தூண்டுதலின்போது மட்டுமே ஏற்ப்படும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்தது. பெரும்பாலும் தனது உணவு தேவையை பூர்த்தி செய்யவும், தனக்கு ஏற்படும் அபத்துகளில் இருந்து தற்காத்துகொள்ளவும் நேரத்தை செலவிட்டான். கற்கால மனிதனாக வாழ்ந்த ஆதிமனிதன், அதுவரை குடும்பம் என்ற அமைப்போ , மொழியே இல்லாத 1லட்சம் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட காலத்தில், இன்றுபோல் கணினியோ, காகிதமோ, ஓலைச்சுவடியோ , மொழியோ போன்ற எந்த ஒரு தகவல் தொடர்பு முறைகளோ இல்லாதபோது , மனித இனப்பெருக்கத்தின் அவசியத்தையும் , அதற்க்கு வித்திடும் ஆண் பெண் பாலினச்சேர்கையின் அவசியத்தையும் எவ்வாறு கடத்தியிருப்பான் ? அதை கடத்த, அவன் மேற்கொண்ட வழிமுறையில் முக்கியமானது, ஆண் பெண் இனச்சேர்கையை குறிக்கும் உருவகமாக #சிவலிங்த்தை உருவாக்கினான். குகைகளில் கற்களை கொண்டு தீட்டப்பட்ட ஓவியமாகவும், பிறகு களிமண் மற்றும் கற்புதை சிற்பமாகவும் ,சிவலிங்க தோற்றத்தை உருவாக்கி, அதன் ஊடாக இனச்சேர்கையின் அவசியத்தை சந்ததிகளுக்கு கடத்தினான். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சிவலிங்க வழிபாடு என்பது 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மனிதனிடம் காணப்படுகிறது என்கின்றனர். மிகவும் பழமை வாய்ந்த சிவலிங்க கற்ச்சிலைகள் உலகம் முழுவதும் பற்பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிக. பின்வரும் தலைமுறைக்கு கடத்த , அதை வழிபடவும் செய்தான். ஏனென்றால் இனப்பெருக்கமே அப்போது மனித இனத்தை தற்காத்துக்கொள்ளும் முதன்மை ஆயுதமாக கருதியதால் , அதை போற்றத்தொடங்கினான். 50000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் சிறு சிறு ஓசைகள் எழுப்புவதன் மூலமாக, மொழி உருவாகத்தொடங்கினாலும், இன்றிலிருந்து 20000 ஆண்டுகளுக்கு முன்புதான், எழுத்துக்கள் ( சித்திர எழுத்து ) உருவாகி , மொழி வேகமாக வளர்ச்சியடைந்தது , . மானுடன் பேசிய முதல் மொழி தமிழே. தமிழில் தோன்றிய முதல் சொற்கள் யாவையும் ஏரணம் முறையிலேயே (லாஜிக்கல்) தோன்றின. உதாரணமாக கூ கூ என்று கூவியதால் அதற்க்கு கூயில், அதுவே குயில் என்று பெயர் வந்ததுபோல , எல்லா சொற்களுக்கும் அது தோன்றியதர்க்கான காரணம் உண்டு. இவ்வாறு தோன்றிய தமிழுக்கு, முதன் முதலில் பட எழுத்துக்களை உருவாக்கி , முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து, தமிழை வளர்த்தெடுத்தவர், குமரிக்கண்ட குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்த (மலை மற்றும் மலைசார்ந்த பகுதி ) முதல் சித்தனான #சிவனே. சிவலிங்க தோற்றமான , ஆண் பெண் இனைவே, பிள்ளைகளை ஈனுவதற்க்கு காரணம் ஆதலால் , ஈனுதல் என்ற பொருள்பட அதற்க்கு ஈசன் என்று பெயர்வைத்தவர் சிவனே. அந்த தோற்றத்திற்க்கு ஈசன் என்று பெயர்வைத்ததாலேயே பிற்காலத்தில், சிவனையும் ஈசன் என்றே அழைத்தனர். சிவலிங்கத்தின் அடிப்பாகம் ( மேடைபோன்ற அமைப்பு ) பெண்ணின் சிவந்த யோனியை குறிப்பதால் #சிவம் என்றும். மேலே நீண்ட அமைப்பு ஆணின் கந்துவை குறித்து , ஆதாவது ஆணின் அங்கம் எனும் பொருள்பட #ஆணங்கம் என்றும், இவை இரண்டும் சேர்ந்த தொகைவடிவத்தை சிவம்+ஆணங்கம் = சிவாணங்கம் எனவும் , பிறகு சிவணங்கம் அதுவே #சிவலிங்கம் என்றானது. இவ்வாறாக ஈசனான சிவலிங்கத்திற்க்கு பெயர்வைத்தவரும் முதல் சித்தனே என்பதால் , அவரை சிவலிங்கத்தின் "சிவ" எனும் முதல் பெயரால் #சிவன் என்கிறோம். மனிதனாக பிறந்து மகத்தான பல சாதனைகள் புரிந்து , குண்டலினியை எழுப்பி ஐம்புலன்களையும் அடக்கி நிர்வாண நிலையெய்தி, முக்தியடைந்த முதல் சித்தனே சிவன். எனவே இவர் மனித குலத்தின் முதல் கடவுளாக பார்க்கப்படுகிறார். இருமை தத்துவத்தை வழங்கிய சிவனை ஆக்கத்திற்கான வடிவமாக #சிவலிங்க வடிவிலும். அழிவிற்க்கான வடிவமாக யாமன் எனும் #எமனாகவும் நாம் வழிபடுகிறோம்.


#மூவிரு_கோணம் *********************** பிறப்பு தத்துவமான சிவலிங்கத்தின் அடுத்த பரிமானமாக அதன் சுருக்க குறியீட்டை (மேலிருந்து கீழ் நோக்கிய முக்கோணம் பெண்ணாகவும் , கீழிருந்து மேல்நோக்கிய முக்கோணம் ஆணாகவும் , ஆண்-பெண் சேர்கையின் சுருக்க குறியீடாக ) உலகிற்க்கு முதன் முதலில் வழங்கியதால் ( அருங்கோணம் ). மூவிருகோணன் (3x2) என்று பொருள்பட #முருகன் எனப்பட்டார். ஆறு முனைகளை கொண்ட கோணம் ஆதலால் " #ஆறுமுகம்" என்று அழைக்கப்பட்டார். 10000 ஆண்டுகளுக்கு முன்பு குமரிகண்ட நீரூழியில் லட்சக்கணக்கான நமது முன்னோர்கள் மரணித்து போனதால். எஞ்சிய நமது முன்னோர்களை மீட்டு, தென் இலங்கையில் குடியேறியவர் முருகன் எனும் சித்தர் , அதன்பிறகு குறைந்தளவு மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும், குமரிக்கண்டத்தில் தோன்றிய கலை அறிவியல் பன்பாடுகள் அழியாமல் காத்திட, மக்கள் தொகை பெருக்கத்தை உடனே விரைந்து அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டு , இதனால் குழந்தை பேரு சம்மந்தமான அறிவியல் உண்மைகளை கண்டறிந்து மக்களுக்கு வழங்கியதால் - குழந்தையை குறிக்கும் "#பாலன்" என்றும் " #பால_முருகன்" என்றெல்லாம் அழைக்கப்பட்டார். ஆணின் கந்துவில் ( ஆணுறுப்பு ) இருந்து வெளியேறும் பலகோடி விந்தணுக்களில் ஒன்றுமட்டுமே முந்தியடித்து பெண்ணின் கருவுக்குள் நுழைந்து வெற்றியடைகிறது... அப்படி வெற்றியடைந்த (வெல்) விந்தணுவே கருவாகிறது பிறகு குழந்தையாக உருவாகிறது. இப்படி வெற்றி பெற்ற விந்தணுவின் வடிவிலேயே தனது தற்காப்பு ஆயுதமான வேலை வடிவமைத்ததால் "#வேலன்" எனப்பட்டார். ( இங்கு வெற்றி என பொருள்படும் #வெல் என்ற சொல்லே மறுவி "#வேல்" ஆனது ). அதற்க்கு #வெற்றி_வேல் என்ற அவறது பெயரே சான்று. விந்தணுவின் பெரிதாக்கப்பட்ட உருவமே "வேல்" எனும் ஆயுதம். கருவளத்திற்க்கான கடவுள் ஆதலால் ( ஆணுறுப்பின் பெயரால் ) "கந்தன்" எனப்பட்டார். குழந்தைபேறுக்கு உறுதுணையாக உதவும் மூலிகையை கண்டறிந்து மக்களுக்கு வழங்கியதால். அந்த மூலிகைக்கு முருகன் பெயரால் " முருகன் மரம் " என்றும் பிறகு #முருங்கை மரம் என்றும் பெயரிட்டு அழைத்தனர். முருகனை வழிபட உகந்த நாளாக கருதப்படும் கிருத்திகை நாளன்று. முருகனின் கொடையான முருங்கை கீரையை படையலிட்டு வழிபடும் முறை , இன்றும் தமிழர்களிடையே வழக்கத்தில் உள்ளது

"விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்"

என்ற கந்தசஷ்டி கவசம் வரிகளே.. நான் மேற்கூறிய முருகன் தொடர்பான குழைந்தைபேறு பங்களிப்பை பறைசாற்றும் சத்திய சான்று... குழந்தை பேறுக்கான முருகனின் இந்த மகத்தான தொண்டை வரலாற்றில் இருந்து மரைக்கவே... மனித பிறப்பு தத்துவத்திற்க்கு சற்றும் பொருந்தாத , சிவனின் நெற்றிகண் வழியே முருகன் பிறந்ததாக கதை அளந்தனர் வந்தேறி யூத பிராமணர்கள். சிவனின் காலம் 20000 ஆண்டுகளுக்கு முன்பு , முருகனின் காலம் 10000 ஆண்டுகளுக்கு முன்பு. (முருகன் இரண்டாம் தமிழ்ச்சங்கம் கண்டவர் என்பது முக்கியமான ஒன்று )


#கும்பகரணன்_கும்பம் ************************ இவர் 7500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராவண பெரும்பாட்டனின் இரண்டு சகோதரர்களில் ஒருவர். முருகன் காலத்திற்க்கு பிறகு சிவலிங்கத்தின் அடுத்த பரிமானமான, மற்றுமொரு குறியீடாக, கும்பத்தை உருவாக்கியவர். இவர் அந்த கும்பத்தை உருவாக்கியவர் என்ற வரலாற்றை தக்கவைக்க, கும்பத்தை தனது கரங்களில் ஏந்தியவர் என்று பொருள்பட, கும்பம்+கரணன் = கும்பகரணன் என்று பெயர்வந்தது. கும்பத்தின் நீர் நிறைந்த குடமானது பெண்களின் கருப்பையை குறித்து (பணிக்குடம் ) சிவலிங்கத்தின் அடிபகுதியான சக்தியை குறிக்கிறது. குடத்தின் மேல் பகுதியில் வைக்கப்படும் தேங்காய் ஆண் லிங்கமாக ( தேங்காய் நீர் ஆணின் சுக்கிலத்தை குறிக்கும் ) சிவனை குறிக்கிறது. தேங்காய் சிவனை குறிக்கிறது என்பதை நிறுவும் சான்று, தேங்காயின் நார்குடிமி சிவனின் சடைமுடியையும், தேங்காயில் உள்ள மூன்று கண்கள் , முக்கண்ணனான சிவனை குறிப்பதாக அமைந்துள்ளது . எனவே கும்பம் என்பது ஆக்கத்திற்கான வடிவமான சிவசக்தி தத்துவமான சிவலிங்கத்தையே குறித்து உருவாக்கினார் கும்பகர்ணன். பிற்காலத்தில் தங்களது இடத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை சான்றோர்களை மரியாதையுடன் வரவேற்க்க. வரும் நபருக்கு எல்லா விதமான சகல நன்மைகளும் ஏற்ப்படட்டும் , நலம் உண்டாகட்டும் என்று பொருள்பட கும்பத்தை தனது கைகளில் ஏந்தி அவர்களிடம் அந்த கும்பத்தை வழங்கி வரவேற்ப்பதை #பூரான_கும்ப மறியாதை என்றனர். இந்த வழமையே பிற்காலத்தில் கும்பம் எதுவும் இல்லாமல், அதற்க்கு பதிலாக இரு கைகளை கூப்பி கும்ப முத்திரையிட்டு வரவேற்ப்பதை கும்பமிடுதல் என்கிறோம், அதுவே #கும்பிடுதல் என்றானது. கைகளை கூப்பி கும்பிடும் பழக்கமும், கும்பகரணனிடம் இருந்தே தோன்றிய ஒன்று. கும்பகர்ணன் காலத்திற்க்கு முன்பு கடவுளர்களை வணங்கும்பொழுது கும்பிடும் பழக்கம் இல்லை, அதுவரை மக்கள் தங்களது கடவுளையும் முன்னோர்களலயும் வழிபட, தங்களது கைகளை நெஞ்சில் அல்லது வயிற்றில் வைத்துக்கொண்டு சங்கல்பம் செய்யும் முறையே கடவுளை வழிபடும் முறையாக இருந்தது.


#கும்பாபிஷேகம்_எனும்_கும்பமுழுக்கு **************************************** புதிதாக பதிட்டை செய்யப்பட்ட கடவுள் சிலைக்கு கும்பத்தால் அபிஷேகம் செய்து, அதாவது சிலைக்கு உயிர் கொடுத்து, வழிபாட்டை தொடங்கி வைக்கும் சடங்கே கும்பாபிஷேகம் எனும் கும்பமுழுக்கு. கும்பம் சிவசக்தியின் வடிவமாக கருதப்பட்டதால், சிவசக்தியில் இருந்தே அனைத்து மனித உயிர் உருவாக்கம் துவங்கியதால் , புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோவிலையோ சிலையையோ வழிபாட்டிற்க்கு கொண்டுவரும் முன்பு அது சிவசக்தியில் இருந்தே தோன்றியதாக சடங்கு செய்யப்படுகிறது. சிவசக்தியே முதல் கடவுளாகவும் அதில் இருந்தே ஏனைய தெய்வங்களும் உருவானது என்பதை உணர்த்தும் சடங்காக இது அமைகிறது. கும்பத்தை வேல்வி குண்டத்தின் முன்பு வைத்து தீயேழுப்பி கடவுள் மந்திரங்களை ஒலிப்பதின் மூலமாக , அந்த சிலையில் பிறக்கப்போகும் கடவுளின் கரு , கும்பத்தில் உருவாக்குவதாக கருதப்படுகிறது. இந்த கருப்பையில் இருந்து ( கும்பம்) ஒரு தர்பை புல்லினால் ஆன கயிறு மூலவர் சிலையுடன் இனைக்கப்படுவது. இது பணிக்குடத்தில் உள்ள கரு தொப்புள்கொடியால் தாயோடு இனைக்கப்பட்டிருப்பதை குறிக்கிறது. இந்த தொப்புள்கொடி வழியாகத்தான் கற்ச்சிலை கடவுள் என்ற வடிவம் பெருகிறது. கற்ச்சிலை கடவுளாக உயிர்பெற்றதின் இருதிச்சடங்காக இந்த குடத்தில் உள்ள நீரானது, மூலவர் சிலையின்மீது ஊற்றப்படுகிறது. இதன் பொருள் , இதுவரை கருவாக உருவாகிவந்த கற்ச்சிலை , பணிக்குடம் உடைந்து முழு கடவுளாக உயிர்பெற்றதாக கருதப்படுகிறது. ( இதன் பின் இருக்கும் அறிவியல் உண்மையை நாம் இதுவரை முழுமையாக அறியாது இருந்தாலும் , இது நம் கடவுளர்கள் யாவரும் , சிவசக்தி எனும் முதன்மை கடவுளிடம் இருந்தே தோற்றம்பெற்றதாக கருதி, அதை காலம்காலமாக கடத்தும் ஒரு சடங்காக செய்து வந்துள்ளனர். அதவாது குண்டலினியை முதன் முதலில் எழுப்பி மரணமில்லா பெருவாழ்வு அடைந்து கடவுளானவர், முதல் சித்தன் சிவனே. எனவே சிவனுக்கு பிறகான காலத்தில் தோன்றிய, சிவனின் குண்டலினி முறையை பின்பற்றி கடவுளர்களாக மாறிய யாவரும், அவரின் வழித்தோன்றல்களாகவே கருதுகின்றனர் நம் முன்னோர்கள். அனைத்து கடவுளும் சிவசக்தியின் வழிவந்தவர்கள் என்பதால்தான், வைனவ கோவில்களிலும் கும்பமுழுக்கு நடைபெறுகிறது. விஷ்ணுவும் சிவனை போற்றி , அவர் வழி பயனித்த கடவுளாவார். விஷ்ணு சித்தர் திருசிறார்பள்ளியை தலைநகராக கொண்டு பரத கண்டத்தை ஆண்ட சித்த பேரரசர். இவர் ஒரு விண்ணாய்வு சித்தர். தமிழர் வரலாற்றை தக்கவைக்க , சிவன் முருகன் தொடங்கி , ராமாயண , மகாபாரத வரலாற்று நாயகர்களை , தான் கண்டறிந்த 12 இராசி பட்டியலில் குறியீடாக வைத்தவர். விஷ்ணு சித்தர் வாழ்ந்த காலம் 3800 ஆண்டுகளுக்கு முன்பு.

விஷ்ணு சித்தர் வரையறுத்த நட்சத்திர ராசி பட்டியல்

#ரிஷபம் - சிவன் #மேஷம் - முருகன் #மீனம் - இராவண இந்திரன் இரட்டையர் #கும்பம் - கும்பகர்ணன் #மகரம் - கிருஷ்ணர் #தனுசு - அர்ஜுணன் #விருச்சிகம் - பீமன் #துலாம் - சகாதேவன் #கன்னி - திரௌபதி ( மீனாட்சி) #சிம்மம் - தர்மன் #கடகம் - நகுலன் #மிதுனம் - துரியோதனன் & சகுனி


#ராமாயணத்தில்_கும்பகரணன் ********************************** கும்பகர்ணன் தனது இடைவிடாத ஓகத்தின் பலனாக, பஞ்சமா சித்திகளுள் ஒன்றான #மகிமம் சித்தியை அடைந்தவர். இதனால் உடலை பெரிதாக்கும் வள்ளமை பெற்றவர் . மகிமம் சக்த்தியை பயன்படுத்த ஒருமுறை உடலை பெறிதாக்கிய பிறகு அதன் பழய நிலமைக்கு திரும்ப இயலாது. இந்த சக்தியை அடைவதற்கு 6 மாதங்கள் தொடர்ந்து ஓகத்தை மேற்கொண்டு, பல மாதங்கள் உணவு உண்ணாமல் இருந்தவரை ,6 மாதங்கள் உரங்கிய தூங்கமூஞ்சியாகவும் பிறகு தூக்கம் கலைந்து மிகவும் பசிகொண்டு அதிகமாக சாப்பிடும் நபராகவும் தனது சமஸ்கிருத புராணத்தில் இவரை இழிவுபடுத்தினர் யூத பிராமணர்கள்.

இராவணீய இருதிப்போரானது இரண்டுமுனை போர்களாக அமைந்தது. ஒன்று இலங்கையின் வடக்கே பாக்ஜலசந்தியில் நடந்த வடமுனை போரான கடற்போரில், ராமனின் படையை எதிர்த்து இராவணனின் மகன் இந்திரன் வென்றான் , ராமன் மற்றும் இலக்குமணன் இருவருமே ஜலசமாதி அடைந்தனர். ராமன் "செத்த" பாலமே, ராமன் "சேது" பாலம். மற்றொறு முனை போரானது இலங்கையின் தெற்கே விபீஷணன் படையை எதிர்த்து இராவணன் தரப்பில் போர் புரிந்து விபீஷணனை கொன்றவர் கும்பகர்ணன் ஆவார். கும்பகரணனின் பெரிய உடல் தோற்றத்திற்க்கே ஏற்ப்ப , அவரது ஆயுதமான வில் அம்புகள் பெரியதாக இருந்ததால், இவரால் எய்யப்படும் அம்புகளுக்கு ஆற்றல் மிகுதியாக இருந்தது. இதனால் இவர் போரில் எளிதில் வெற்றிபெற்றார். இதேபோல உடலை பெரிதாக்கும் மகிமம் சக்திய பெற்ற பிற்கால வரலாறு நாயகர்கள் , 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பீமன் மற்றும் கடோத்கஜன் மாபெரும் வரலாறு நாயகனான கும்பகரணனை, தூங்கமூஞ்சியாகவும், சாப்பாட்டு பிரியனாகவும் இழிவுபடுத்திய ராமனின் வாரிசுகளுக்கு பதிலடியாக, ராமனை #சாப்பாட்டு_ராமன் என்ற பட்டம் கொடுத்தனர் நம் முன்னோர்கள் என்பது தனிக்கதை.

2012 மயன் நாட்காட்டி முடிவடைந்த நாளோடு, கலியுகம் முடிந்து, 2013ல் சத்தியயுகம் பிறந்ததாள், இப்பொழுது தமிழர்களின் மீலெழுர்ச்சிகாலம். இனி வரும் காலங்களில் அனைத்து விதத்திலும் இராவணனின் வாரிசுகளாகிய தமிழர்கள் . வந்தேறி ராமனின் குரங்குப்படைக்கு தகுந்த பதிலடியை கொடுக்கும். உலகத்தில் அறமும் அமைதியும் தழைக்கும் என்பதை கூறிக்கொண்டு. நாம் தமிழராய் ஒன்றினைவோம்.

பண்பாட்டு புரட்சி இல்லாது..! அரசியல் புரட்சி வெல்லாது...!

நாம் தமிழர்

14 views0 comments