Search

ஸ்ரீமதி விவகாரம் சீமான் வாயைமூட உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்ரீமதி விவகாரம் குறித்து பொது மேடைகளில் பேச வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே சீமான் சென்னையில் நடந்த ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீ மதி விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார் காவல் துறையை விமர்சித்தார். இந்த சூழலில் ஸ்ரீ மதி விவகாரம் நீதி மன்றத்தில் இருப்பதால் சீமான் பொது இடங்களில் இதை பற்றி பேச கூடாது என்று காவல் துறை தரப்பு கூறியுள்ளது. ஆனால் சீமான் தவிர வேறு எந்த அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தை பேச வில்லை என்பது தான் உண்மை. ஏன் என்றால் இதில் வாக்கு இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சீமானும் பேச கூடாது என்றால் இது போல் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்படும் சாமானியர்களின் நிலை என்ன என்று மக்கள் கேள்வியெழுப்பி உள்ளனர். இது குறித்து சீமான் கூறியது என்ன வென்றால் ஸ்ரீ மதிக்குக் உரிய நீதி நிலை நாட்டப்படவேண்டும், மேலும் இது போன்று பள்ளி வளாகத்தில் நடக்கும் மாணவர்களின் தற்கொலைகளும் கொலைகளும் தடுத்து நிறுத்தப் படவேண்டும் அதுவரை தொடர்ந்து பேசுவேன் என்றார்.


7 views0 comments