Search

கோவையில் நாம் தமிழருக்கு எதிராக சுவரொட்டி

கோவையில் நாம் தமிழர் கட்சி அடித்ததாக ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஹரா “ஹரா சங்கரா,ஜெய் ஜெய் சங்கரா” என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகிவுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் அப்துல்வகாப் கூறியதாவது. எங்களை எதிர்கொள்ள முடியாமல் எதிரிகள் செய்யும் சூழ்ச்சிதான்,இப்படிப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டி நாங்கள் பாஜகவின் பீ டீம் என்று எதிரிகள் போட்டதிட்டம் தான் இது என்றார். நாங்கள் ஹரா ஹரா பிரபாகரா,ஜெய் ஜெய் பிரபாகரா என்று தானா சொல்லுவோம் ஒழிய “ஹரா சங்கரா,ஜெய் ஜெய் சங்கரா” என்று சொல்ல மாட்டோம். ஏன்னா எங்க வளர்ப்பு அப்படி என்றார். மேலும் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துவுள்ளதாகவும் அவர் கூறினார். திமுக பிஜேபி கூட்டணி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பிஜேபியை எதிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.



64 views1 comment