Search

கார் வாங்கிய சீமான் வயிறு எரிந்த சவுக்கு

சீமானிடம் இருக்கும் ISZU கார் ஏற்கனவே சர்ச்சைகளுக்கு பேர் போனது. சீமான் அந்த காரை இரண்டாம் தரமாக தான் வாங்கினேன் என்று விளக்கம் அளித்தும். சீமான் இந்த காரை வாங்க அவரிடம் ஏது இவ்வளவு பணம் என்று ஆரியரும் திராவிடரும் மாறி மாறி கேள்வியெழுப்பினார். பழைய கார் வாங்கிய சீமானை பார்த்து பொறாமை பட்ட ஊப்பிகளுக்கும் சங்கிகளுக்கும் மேலும் வைத்தெரிச்சலை கிளப்ப சீமான் புது கார் ஒன்றை வாங்கி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிதாக மகிழுந்து வங்கியுள்ளது தம்பிகளுக்கு மகிழ்ச்சியையும் சங்கிகளுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சவுக்கு சங்கர் - 60 லட்ச ரூபாய்க்கு புதிய மகிழுந்து வாங்கியிருக்கும் அதிபருக்கு வாழ்த்துக்கள். புது கார்ல ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போங்க அதிபரேஎன்று ட்விட்டரில் நக்கலாக பதிவு செய்துள்ளார். அவரின் பதிவுக்கு தம்பிகள் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்


49 views0 comments