நாம் தமிழர் கட்சி  கொள்கைகள்​

 • தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது

 • மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை பெறுவது 

 • அரசியல் சட்டதிருத்திருத்தம் கொண்டுவருவது 

 • தமிழனையே என்றும் ஆள வைப்பது 

 • நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவது 

 • அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பது; தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்பது 

 • உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவது 

 • பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவது

 • வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்பது

 • சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்பது; சமத்துவமாய் வாழ வழிவகை செய்வது

 • மகளிருக்குச் சமவுரிமை வழங்குவது 

 • எங்கும் தமிழ் ஒலிக்கச்செய்வது 

 • அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழி, பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே வழிபாட்டு மொழி! வழக்காடு மொழியாக மாற்றுவது 

 • தமிழ்வழியில் கற்றவருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது 

 • ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்பது

 • நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது! ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது!

 • அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம்! கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்

 • மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவது

 • அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவது

 • தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்பது; கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்பது

 • அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவது

 • மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவது. அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வது.

 • பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்பது (எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.

 • பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்பது

 • அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம்! நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவது

 • சிலம்பம், களறி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்பது

 • தேசிய திராவிட கட்சியோடு சமரசமின்றி மக்களோடு நின்று தேர்தலை எதிர்கொள்வது 

இதுவே நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் 

"இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை"