Picture1.png
palm.jpg

தஞ்சை பெரிய கோவில் தமிழ் குடமுழுக்கு உரிமையை சட்டப்போராட்டத்தின் மூலம் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு மீட்பு பாசறையான வீரத்தமிழர் முன்னணி பெற்றுத் தந்தது 

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பனை விதைகளையும், மரக்கன்றுகளையும் நட்டது நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை 

SalemExpresswayVillagersProtest750.jpg

சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான விவசாயநிலங்கள் அழிவதோடு இரண்டு மலைகளும் அழிக்கப்பட இருந்தது. இதை தடுத்து நிறுத்த மக்களோடு போராடி நீதிமன்றத்தில் நாம் தமிழரின் வழக்கறிஞர் பாசறை சட்டப்போராட்டம் செய்து தடுத்து நிறுத்தியது. மேலும் இந்த போராட்டத்தால் சீமான் கைதும் செய்யப்பட்டார். 

Picture4.png

கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் கபசுர குடிநீர் வழங்கினர். மேலும் கொரோனாவால் வாழ்வாதாரம் பதித்த ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு காய்கறி அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டது 

Picture5.png

ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர் கட்சியினர் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுடைய பிறந்தநாள் தினமான நவம்பர் 26 அன்று குருதி கொடை தமிழகம் முழுவதும் வழங்குவர். மேலும் நாம் தமிழர் கட்சியின் குருதி கொடை பாசறை, தேவை அறிந்து மக்களுக்கு குருதி கொடை அளித்துவருகிறது. குருதி கொடை பாசறை கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

EeUB0--U4AEUXvi.jpg

சுற்று சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகளுக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட EIA - 2020யை  கண்டித்து அதை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் செய்தனர். சீமான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசுக்கு லட்ச கணக்கில் மின்னஞ்சல் அனுப்பினர் 

Picture6.png

ஏழைகளுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் புதிய கல்வி கொள்கை, மேலும் தமிழ்மொழியை சிதைக்க ஹிந்தியை திணிக்கும் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையினர் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர் 

media-handler.jpg

காவேரி நதி நீர் உரிமைக்காக தொடர்ந்து நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது. அக்கட்சின் விக்னேஷ் இதற்காக தீக்குளித்து இறந்து போனார். இந்த நிலையில் போராட்டக்காரர்களின் உணர்வை துளியும் மதிக்காது IPL போட்டி நடத்தி காவேரி போராட்டத்தை நீர்த்து போக செய்ய மத்திய அரசு முயற்சித்தது.  ஆனால் நாம் தமிழர்கள் மைதானத்திர்கே சென்று தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். எதிர்ப்பை காட்டினர் 

Students-V-std.jpg

இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் செய்து அதில் வெற்றியும் கண்டது நாம் தமிழர் கட்சி 

97.jpg

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் காப்பாற்றப்பட்டது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்று வட்டார பாதுகாக்கப்பட பகுதிக்குள் ஆக்கிரமிப்பு செய்ய ஊழல் அரசியல்வாதிகள் மூலம் சன் பார்மா சர்வதேச மருந்து கம்பேனி முயற்சித்தது. அதை சீமான் அவர்கள் தந்த துணையில் தைரியத்தில்  நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் திருமதி வெண்ணிலா அவர்கள் தலைமையில் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். பறவைகள் சரணாலயத்தை காத்தனர். மனிதர்களுக்காக மட்டும் அல்ல உயிர்களுக்கும் அரசியில் செய்பவர்கள் என்று மீண்டும் நாம் தமிழர் கட்சியினர் நிரூபித்தனர்.